வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 August 2022

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !!!

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பின்னலூர்ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர்களை துறை அமைச்சருமான எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி ஆசிரியர் முன்னேற்ற கூட்டுறவு சங்க தலைவர்   துரை மணி ராஜன் தலைமையில் அவரது இல்லத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழை முதியவர்களுக்கு காலை உணவு மற்றும்  புடவை வேஷ்டி, லுங்கி, துண்டு, போர்வை, பழவகைகள் அடங்கிய  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புவனகிரி திமுக  மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மதியழகன்    சேத்தியாத்தோப்பு திமுக நகர கழக செயலாளரும் அரசு வழக்கறிஞருமான பழனி மனோகரன் புவனகிரி ஒன்றிய துணைச் செயலாளரும் அரசு வழக்கறிஞருமான வேல் ராமலிங்கம்  ஆகியோர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


மேலும் நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம் ஊராட்சிமன்ற கூட்டமைப்பு தலைவர் அப்பா ரவிக்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயமாலா செல்வம்      ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகன் ஊராட்சி மன்ற தலைவர்கள் அன்பழகன். சாரங்கபாணி. பரசுராமன் .பன்னீர்தாஸ் ராமச்சந்திரன். ராமசாமி ராச கண்ணு. ரமணி .உமா செல்வராஜ் .செந்தில் பன்னீர்செல்வம் .கனகவேல் இளைஞரணி விமல்ராஜ் ஆகிய கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர், இறுதியாக குமரவேல் தலைமை ஆசிரியர் நன்றி உரை வழங்கினார்

No comments:

Post a Comment

*/