கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 July 2022

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  S. சக்திகணேசன் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் புகார் மனு சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.


மருங்கூர் தோப்புக்கொல்லையை சேர்ந்த  ராமர் (75 ) த /பெ, மன்னாதன்  என்பவர் தனது மூன்று மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்த பொது வழியை மற்ற இரண்டு மகன்கள் பொது வழியில்வாகனங்களை நிறுத்தி பொது வழியை பயன்படுத்த தடை ஏற்படுத்தியதை கேட்ட தனது மூத்த மகன் சந்திரசேகர் , அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோரை தாக்கியதாக  மாவட்டக் காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம்  காவல் நிலையத்தில்  குற்ற எண் 340/2022 பிரிவு 294 ( b ) , 506 ( i ) IPC யின்படி வழக்குபதிவு செய்து  விசாரணை செய்துவருகின்றனர்.


கீழக்கொல்லையை சேர்ந்த ஜோதி வயது (37) க / பெ அன்பு ,  என்பவர் கொடுத்தபுகாரில் கவிபாலன் என்பவரிடம் வாங்கிய நிலத்தை திருப்பி கேட்டபோது ஜோதி தர மறுத்ததால் கவிபாலன் போலி ஆவணம் தயார் செய்து கிரையபத்திரம் எழுதி பதிவு செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.

வேப்பூர் திருப்பயர் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி வயது 73 த / பெ வடிவேல் கொடுத்த புகாரில் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ராமசாமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ள நிலையில் ராமசாமி அவ்விடத்தில் பாத்ரூம் கட்ட உள்ளதாக கொடுத்த புகார் மனு சம்மந்தமாக வேப்பூர் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்துவருகிறார்


கடலூர்அருகே உள்ள நடுவீரப்பட்டு வன்சியாபுரத்தை சேர்ந்த விருந்தாம்பாள் க / பெ கலியபெருமாள் வயது 75 , என்பவரின் 3 1/2 ஏக்கர் நிலத்தினை தனது மூத்த மகன் மற்றும் அவரது மகன் சொத்தினை கேட்டு கொலை செய்ய முயற்சி செய்வதாக கொடுத்த புகார் மனு சம்மந்தமாக நடுவீரப்பட்டு உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு புகார்தாரரின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

 

மங்கலம்பேட்டையை சேர்ந்தசிவஞானம் த / பெ முத்துலிங்கம் வயது (59) என்பவருக்கு சொந்தமான இடத்தில் சந்தானம் மற்றும் அவரது மனைவி வேலி போட்டுள்ளதாக கொடுத்த புகார் மனு சம்மந்தமாக மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு  தீர்வுகாணப்பட்டது இவ்வாறு மாவட்டகாவல் கண்காணிகபாளர் சக்திகணேசன் பொதுமக்கின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுத்துவருகிறார் .

No comments:

Post a Comment