சிதம்பரத்தில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
சிதம்பரம் நகரப் பகுதிகளில் குப்பைகளை இல்லாத நகரத்தை உருவாக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து முயற்சி களை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார் சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் கோட்டாட்சிய ரவி நகர மன்ற துணைத் தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர்நலன் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார் பொதுமக்கள் குப்பைகளை தரன் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு தொட்டிகளையும் வழங்க வேண்டும் ஒவ்வொரு மக்கும் குப்பை மக்காத குப்பை அணி பிரித்து வழங்கினார்கள் சிதம்பரம் நகரம் தூய்மை நகரமாக மாறும் இந்த பணிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைக்கும் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார் பொதுமக்கள் குப்பைகளை தனித்தனியே பிரித்து கொடுப்பதாக இரண்டு பிளாஸ்டிக் தொட்டிகளை வழங்கினார் இதை தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட வரும் காய்கறி மார்க்கெட் பணிகளை பார்வையிட்டு அண்ணா குளம் பணிகளை நேரில் பார்வை விட்டு ஆய்வு செய்தார் நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் மகாராஜன் நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் சுதாகர் மணிகண்டன் ராஜன் ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன் சுனிதா மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி பாலசுப்ரமணியன் மக்கள் அருள் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment