காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி


காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான பொது மக்களின் பங்கேற்பு திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதன் ஒழிக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.


அதில் மக்கும் தன்மைக்கு உரிய மக்காசோளம் மற்றும் கரும்பு சக்கை ஆகியவற்றின் மூலம் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மக்கும் தன்மை உடையவை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கணேச மூர்த்தி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி கண்காட்சி திறந்து வைத்தார்.


துணைத் தலைவர் ராஜேஸ்வரி மணிமாறன் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முன்னதாக அனைவரையும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் துரைராஜ் வரவேற்று பேசினார் இதில் வர்த்தக சங்கத் தலைவர் சீனிவாச நாராயணன் பொருளாளர் நடராஜன் நிர்வாகி திருவேங்கடம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அறிவழகன் பன்னீர்செல்வம் கிருஷ்ணமூர்த்தி சாதிக் பாஷா நூர்ஜகான் திவ்யா அருள் செல்வி பாக்கியலட்சுமி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது முடிவில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சாந்தி நன்றி கூறினார்


செய்தியாளர் கே பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/