விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 July 2022

விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு

விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  நேரு யுவகேந்திரா இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவை இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும்  கல்வி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து செயலர் சாமிவேல்  முன்னிலை வகித்தார், இருப்பு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிவேல் குழந்தைகள் உடல் நலத்தை பற்றி சிறப்புரையாற்றினார், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் பாலின பாகுபாடு பற்றி விளக்க உரையாற்றினார் , ஏ கே சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலன் இணையதள குற்றங்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களை பற்றி எடுத்துரைத்தார் ,நேரு யுவகேந்திரா அலுவலர் ராமமூர்த்தி நன்றி உரையாற்றினார் , நிகழ்ச்சியில் இருப்பு சுகாதார ஆய்வாளர்கள் ரத்தினசபாபதி,சிவா, கம்மாபுரம் ஒன்றிய ஐசிடி பொறுப்பாளர் தங்கமணி, வார்டு உறுப்பினர் உதய மோகன் மற்றும் இருப்பு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .


விருத்தாசலம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://chat.whatsapp.com/IvPVSXost2U2G2G4Z6uhxS

No comments:

Post a Comment

*/