அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நூறு நாள் சம்பளம் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நூறு நாள் சம்பளம் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நூறு நாள் சம்பளம் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி யதை உடனடியாக வழங்கிட வேண்டும் 100 நாள் வேலைத்திட்டத்தில் சட்ட கூலி 281 குறையாமல் வழங்கி 100 நாள் வேலையை தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் தமிழக அரசு 150 நாட்களாக வேலை வழங்கிட வலியுறுத்தி யும் கடந்த 10 ஆண்டுகளாக வீரனந்தபுரம் கண்டமங்கலம் அகர புத்தூர் மேல கடம்பூர் ஆகிய இடங்களில் பி எம் ஓய் வீடு தானே வீடு ஆகிய வீடுகள் கட்டாமல் பாதியில் நிற்கிறது வீடு கட்டியதாக பணம் எடுத்த காண்ட்ராக்ட் காரர்கள் மீதும் அதற்குத் துணை நின்ற அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றத




 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் விவசாய தொழிலாளர் சங்க வட்ட துணைத் தலைவர் பூச்சந்திரன் கட்டுமான தொழிலாளர் சங்க வட்ட பொறுப்பாளர் விமலக்கண்ணன் மற்றும் தோழர்கள் தனபால் மணிகண்டன் குமார் சாகுல் ஹமீது சிறு குரு விவசாயிகள் சங்க தலைவர் இதயத்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர் பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது 



செய்தியாளர் கே பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/