கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மிராளூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா (17) த/பெ செந்தில் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராப்பாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக கடந்த சில தினங்களாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த (09/06 2022) அன்று அவர் தங்கியிருந்த அறையில் உடல்மேல் பகுதியில் ரத்த காயங்களோடு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பற்றி ஆலை நிர்வாகமும் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை ஜெய் சூரியவோடு வேலை செய்து வரும் சக நண்பர்கள் வீட்டிற்கு தொடர்புகொண்டு ஜெய் சூர்யா இறந்த செய்தியை சொன்ன பிறகு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கள்ளக்குறிச்சி சென்று ஜெய் சூர்யா தங்கியிருந்த அயல் அறையில் இறந்து கிடந்த அவரை யாரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப வில்லை பெற்றவர்கள் நேரடியாக சென்ற பின்பே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
இது சம்பந்தமான கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நாட்களாக இல்லாததால் இன்று 11/06/2022
காலை 10: 00 மணி அளவில் விருதாச்சலம் டூ புவனகிரி நெடுஞ்சாலையில் மிராளூர் கிராமத்தில் பொதுமக்கள் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனே சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் சிதம்பரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிதம்பரம் துணை ஆட்சியர் புவனகிரி புவனகிரி வட்டாட்சியர் வருவாய் துறையினர் உள்ளிட்டோர் போராட்டக் களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழக அரசு இறந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், பதினேழு வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர், கண்டுகொள்ளாத ஆலை நிர்வாகம் மீது தொழிலாளர் நல சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறப்பில் சாதிய ரீதியான அனுகுமுறை இருப்பதாக சந்தேகம் உள்ளது எனவே எஸ்சி எஸ்டி வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய அறிவித்துள்ளனர்.
செய்தியாளர் சாகுல் அமீது


No comments:
Post a Comment