நல்லூர் ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது,
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நல்லூர் ஒன்றிய தலைவர் காந்திமதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கற்பகம், ஒன்றிய துணை செயலாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஒன்றிய இணை செயலர் சத்யா, முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகள் காக்கவும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரியும், காலிப்பணியிடங்களை நிரம்ப கோரியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மேலும், நல்லூரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் தங்களின் கோரிக்கைகளை விளக்கினார்கள்.

No comments:
Post a Comment