வடலூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் குறித்த விழிப்புணர்வு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

வடலூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

வடலூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், வடலூர் மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் குறித்த மண்டல அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது இவ்விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை யேற்று கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்து தொடங்கி வைத்தார்.


அரசு முதன்மை செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் C. சமயமூர்த்தி அவர்கள்  மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை S. நடராஜன் அவர்கள் திட்ட விளக்க உரையினை விரிவாக எடுத்துரைத்தார்கடலூர் மாவட்ட ஆட்சியர் K.பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை உரையாற்றினார்.


கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்கள் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அவர்களும் இத்திட்டங்களை விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டனர் இப்பெருவிழாவில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் T. வேல்முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


இந்நிகழ்வில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தமிழக முதல்வர் அவர்களின் சிறிய வழிகாட்டுதலின்படி உழைக்கும் உழவர் நிலை உயர வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சுய உதவி குழுக்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் வேளாண் விளைபொருட்கள் மதிப்புக கூட்டி விற்பனை செய்ய முன்வரும் தொழில் முனைவோர் அனைவருக்கும் திட்ட செலவிலனத்தில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ 10.00 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் இதற்கான வாய்ப்புகளை அனைவருக்கும் சென்றடைய விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாநிலம் முழுவதும் மண்டல அளவில் நடத்துவது எனவும் இதன் முதல் கட்டமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ,அரியலூர், கள்ளக்குறிச்சி உட்பட்ட மண்டலத்தில் இன்று இவ்விழா துவக்கப்பட்டு மண்டல அளவிலான விவசாய பெருமக்கள் மளவில் கலந்துகொண்டு திட்ட வாய்ப்புகளின் விளக்கம் பெற்று பயனடைந்துள்ளனர் தெரிவித்தார் பின்பு விழாவின் வரவேற்புரை இணை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) எஸ். பூங்கோதை அவர்களும் விழா நிறைவாக கடலூர் விற்பனை குழு செயலாளர் S. விஜயா அவர்களும் நன்றியுரையை வழங்கினார்.


மேலும் விழாவில் உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சந்தை வாய்ப்புகள் விபரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பல்வேறு நிதியுதவி வாய்ப்புகள் வேளாண் தொழில் முனைவோருக்கான நிதி உதவி வட்டி மானியம் மற்றும் முந்திரி ஏற்றுமதி குறித்த விபரங்கள் யாவும் அந்தந்த துறை வல்லுநர்களால் விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது விழா நிறைவில் விவசாயிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகின்ற பல்வேறு சந்தை வாய்ப்புகள் கடனுதவி வட்டி மானியம் பதப்படுத்துதல் புதிய உத்திகள் சந்தைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப செய்தி பரிமாற்றம் குறித்து போதிய விழிப்புணர்வு போதிய தொழில்நுட்ப அறிவும் பெறுவதற்கு வழிகாட்டியாக அமைந்தது சிறப்பு அம்சமாகும்.

உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களின் தயாரிப்புகளான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் 21 அரங்குகளில் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது கண்களுக்கு விருந்தாகவும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயனடையும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்தது


விழாவின் பெருந்திரளான விவசாயி பெருங்குடி மக்களும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அங்கத்தினர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் ஆகிய உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் களுக்கும் தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக கட்டமைப்பு மானியங்களும் மற்றும் தொடக்க நிதிகளும் வழங்கப்பட்டது மேலும் விழாவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனைகள் மற்றும் ஐயப்பாடுகளை நீக்க தொலைபேசி எண் 7200818155 உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

*/