கடலூர் மாவட்டத்தில் 7-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

கடலூர் மாவட்டத்தில் 7-ந் தேதி ஜமாபந்தி தொடக்கம்.


கடலுார் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்குகிறது. கடலுார் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் வரும் 7ம் தேதி முதல் 21ம் வரை ஜமாபந்தி நடக்கிறது.


புவனகிரி வட்டத்தில் கூடுதல் கலெக்டர் தலைமையிலும், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கடலுார் ஆர்.டி.ஓ., தலைமையிலும், ஸ்ரீமுஷ்ணத்தில் முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது.சிதம்பரம் வட்டத்தில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., தலைமையிலும், திட்டக்குடியில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., தலைமையிலும், காட்டுமன்னார்கோவிலில் கடலுார் கலால் உதவி ஆணையர் தலைமையிலும் நடக்கிறது. பண்ருட்டியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.


விருத்தாசலத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தலைமையில் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், வேப்பூர் வட்டத்தில் நில எடுப்பு தனித்துணை ஆட்சியர் தலைமையில் 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும் நடக்கிறது. பொதுமக்கள் பட்டா மற்றும் இதர நலத்திட்ட கோரிக்கைகள் தொடர்பாக, மனுக்களாக எழுதி வருவாய் தீர்வாயம் நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

*/