சிதம்பரம் நடராஜர் கோயிலில் துப்புரவு தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து ATM கார்டை வைத்து 25 ஆயிரம் திருட்டு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

சிதம்பரம் நடராஜர் கோயிலில் துப்புரவு தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து ATM கார்டை வைத்து 25 ஆயிரம் திருட்டு


சிதம்பரம் நடராஜர் கோயிலில் துப்புரவு தொழிலாளி வங்கி கணக்கில் இருந்து ATM கார்டை வைத்து 25 ஆயிரம் திருட்டு


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயியில் துப்புரவுத் தொழிலாளி வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் பணத்தை திருடிய புரோகிதம் செய்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மீட்டனர் 


நடராஜர் கோவில் துப்புரவு பணியாளராக பணியாற்றுபவர் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி விஜயா 50 வயது 

இவர் தனது சுருக்குப் பையில், ரகசிய எண்ணுடன் ஏடிஎம் கார்டுடன் கடந்த ஜூன் 9-ம் தேதி கோயிலில் வேலை செய்யும் போது தொலைத்துவிட்டார்.பின்னர் அன்றைய தினமே அவரது வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் மைத்திலிருந்து ரூ25 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இது குறித்து விஜயா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வங்கி ஏடிஎம் மைய கேமராவை ஆய்வு செய்தனர்.அப்போது அந்த பணத்தை திருடியது சிதம்பரம் கீழபுதுத்தெருவைச் புரோகிதம் செய்யும் சீனுவாசன் மகன் அமிர்தகடேஸ்வர என்பது தெரியவந்து. 


போலீஸார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.25ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.மேலும் சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து அமிர்தகடேஸ்வர ஐயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் பணத்தை இழந்த விஜயாவை வரவழைத்து அவர் இழந்த பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர். இதனையடுத்து போலீசாருக்கு விஜயா கண்ணீர் மல்க நன்றி கூறினார்

No comments:

Post a Comment

*/