கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் - ZRUCC உறுப்பினர் கோரிக்கை
தென்னக இரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு (ZRUCC) உறுப்பினர் காஞ்சிபுரம் வழக்கறிஞர் தெ. தமிழ்ச் செல்வன் DME, MA., BL., அவர்கள், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் அவர்களுக்கு அனுப்பியுள்ள 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவில், "பரங்கிப்பேட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்" என்ற பரங்கிப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் இணைத்துள்ளார்.
வழக்கறிஞர் தெ. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு ஊர் மக்கள் சார்பாக பரங்கிப்பேட்டை பயணியர் நலச்சங்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற தொடர் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டார்கள்.
செய்தியாளர்; சாதிக் அலி

No comments:
Post a Comment