கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா கீழபாலையூரை சேர்ந்த ஆதி திராவிடர் மக்கள் 100 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறுகையில் நாங்கள் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். இது நாள்வரையில் வீட்டு மனை பட்டா வழங்கியது கிடையாது.
இலவச மனை பட்டாவிற்க்கு மனு அளித்து 30 வருடங்கள் ஆகின்றது. அரசாங்கத்தினால் இலவச மனை கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் நிலம் எடுக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது.
அரசாங்க அதிகாரிகளால் அலக்கழிக்கபட்டு இன்று வரையில் எங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இதனை பார்வையிட்டு உடனே பட்டா வழங்க வழிவகை செய்யுமாறு கூறினார்கள் பின்னர் காவல் துறையினரின் முயற்சியால் தர்ணா கைவிடப்பட்டது.

No comments:
Post a Comment