கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் பேரிடர் மீட்பு குழு குறுவட்ட அளவிலான முதல் நிலை மீட்பாளர்களுக்கான மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது .இந்த முகாமிற்கு புவனகிரி வட்டாட்சியர் ரம்யா தலைமை தாங்கினார். மண்டல வட்டாட்சியர் பிரகாஷ் முன்னிலை வகித்தார் .குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கவிதா வரவேற்புரையாற்றினார்.
தமிழக அரசு அரசாணை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியரின் செயல் ஆணையின்படி புவனகிரி வட்டத்தில் உள்ள 73 கிராமங்களில் உள்ள 190 தன்னார்வலர்களுக்கு குறுவட்ட அளவில் முதற்கட்ட பயிற்சி பல்வேறு கிராமங்கள் நடைபெற உள்ளது, அதனையொட்டி முதல் கட்டமாக புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முயற்சி முகாமில் மேல் புவனகிரி, புவனகிரி ,சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, க. ஆலம்பாடி, கீழமணக்குடி ஆகிய கிராமங்களிலிருந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரத்தினகுமார், மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் ஆய்வாளர் சஞ்சய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர் .
பயிற்சியில் பேரிடர் காலங்களில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை எவ்வாறு தன்னையும் பாதுகாத்து பேரிடர் காலத்தில் மக்களையும் மீட்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்பதை பற்றிய தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இந்த பயிற்சி முகாமானது 31.05.22 அன்று பூவாலை சமுதாய கூடத்திலும், 01.06. 2022 அன்று கீழ் வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப் பள்ளியிலும் ,02.06.2022 சாத்தப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் ,03.06.2022 புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ,04.06. 22 பரங்கிப்பேட்டை பல்நோக்கு பாதுகாப்பு மையத்திலும், 22.06 .22 பி. முட்லூர் ஜே கே வி மஹால் ஆகிய இடங்களிலும் பயிற்சியானது தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment