நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

 

கடலூர் மாவட்டம், புவனகிரியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. புவனகிரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார் .மாவட்ட செயலாளர் ரத்தினவேல் ,மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மகாலிங்கம் ,கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ், வீரத்தமிழ் முன்னணி மாவட்ட செயலாளர் சிவஜோதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சாட்டை சரவணன் பங்கேற்று கட்சியின் கொள்கை விளக்க சிறப்புரையாற்றினார்.


அவர் பேசுகையில் திமுக ,அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார் மேலும் சமீபத்தில் புவனகிரியில் காங்கிரஸ் கட்சியினர் சீமான் உருவ பொம்மையை எரித்ததிற்கு  கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டனர் தொடர்ந்து பேசிய சாட்டை சரவணன் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தொண்டர்களை கொடி பிடிக்கவும் போஸ்டர் ஒட்டவும் மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் தங்களது வாக்குகளை விற்பனை செய்வதாகவும் குற்றம்சாட்டி திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


மேலும் இந்த கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் தொகுதி தலைவர்  ஆரோக்கியஸ்டீபன், தொகுதி பொருளாளர் சதீஷ் , நிர்வாகிகள் கந்தவேல், பார்த்திபன், சிலம்பரசன், ஜான் ,ராஜேஷ் ,சேரன், செல்வம், லூர்துசாமி, ராஜேஷ்குமார் ,அன்பரசன், ஜவஹர், சூரியபிரகாஷ் ,பாலமுருகன், செல்லதுரை ,சதாசிவம், உஷாந்த், யேசுதாஸ், ராமச்சந்திரன் ,சிலம்பரசன், மாயகிருஷ்ணன் ,சுகன்ராஜ் ,முத்துமணி, ராம்குமார் ,பிரேமதாஸ் ,தமிழ்வாணன், ஜெயகாந்தன், சரத், சங்கர் ,ராமமூர்த்தி, ராஜ்குமார் ,அன்புச்செல்வன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/