கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் வருகிற 26,27 ஆகிய இரு நாட்களில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்களூர் ஒன்றிய செயலாளர் எம். நிதி உலகநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் வி.பி.முருகையன், மற்றும் சிவப்பிரகாசம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நகர செயலாளர் கு.கௌதமன், ஒன்றிய செயலாளர் ஜான் செங்குட்டுவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாய சங்க தலைவர் ஆர். மகாலிங்கம்,நகர செயலாளர் வரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 26-5-2022 அன்று காலை 10 மணியளவில் திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர்:சாகுல் அமீது

No comments:
Post a Comment