கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம் மேல நெடும்பூர் ஊராட்சி விளத்தூர் மக்களுக்கு ரேஷன் கடை இதுநாள்வரை கிடையாது மக்கள் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று மேல வன்னியூர் கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கும் அவல நிலைமை நீடித்து வந்தது. இந்நிலையில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ரேஷன் கடை கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது இந்நிலையில் ரேஷன் கடை கட்டுவதற்காக ஊரின் புறம்போக்கு மந்தைவெளி இடத்தை தேர்வு செய்தபோது தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தை ரேஷன் கடை கட்ட விடாமல் தகராறு செய்கிறார்,
மேற்படி இடம் அரசுக்கு சொந்தமான மந்தைவெளி புறம்போக்கு இந்த இடத்தின்அருகே அரசு அலுவலகங்கள் உள்ளது எனவே தனிநபர் ஆக்கிரமிப்பு செய்த மந்தைவெளி புறம்போக்கு இடத்தை அரசாங்கம் எடுத்து ரேஷன் கடை கட்டுவதற்கு உதவிட வேண்டும் என கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர்இளைய சிங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் காட்டுமன்னார்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
செய்தியாளர்: கே.பாலமுருகன்

No comments:
Post a Comment