பேரறிவாளன் விடுதலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பேரறிவாளன் விடுதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு திட்டக்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மு. முருகன் கண்டனத்தை தலைமை தாங்கினார் .
இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்
"முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களை கொலை செய்த குற்றவாளிகளில் பேரறிவாளன் என்பவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை ஆனால் கருத்து வேறுபாடுகளுக்கு கொலைச் செயல் தீர்வல்ல வன்முறையை எதிர்ப்போர் த தீவிரவாதத்தை ஒழிப்போம் அவர்கள் குற்றவாளிகள். கொலையாளிகள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் மூலம் தெரியப்படுத்துகிறோம்".திட்டக்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மு. முருகன் தெரிவித்தார்.
செய்தியாளர்; சாகுல் அமீது

No comments:
Post a Comment