காட்டுமன்னார்கோயில் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு வருகிற 23 ஆம் தேதி மறியல் போராட்டம் அறிவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

காட்டுமன்னார்கோயில் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு வருகிற 23 ஆம் தேதி மறியல் போராட்டம் அறிவிப்பு.

காட்டுமன்னார்கோயில் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு வருகிற 23 ஆம் தேதி மறியல் போராட்டம் அறிவிப்பு.


கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் டி நெடுஞ்சேரி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் கண்டிப்பாக வீட்டுவரி வசதி வாங்கினால்தான் 100 நாள் வேலை தரப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்ததை அடுத்து நீண்ட நாட்களாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர் இதுபற்றிய தகவலறிந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் கிராமத்திற்கு நேரில் சென்று பொதுமக்களும் நடந்தவைகளை கேட்டறிந்தார் பின்பு அவரது தலைமையில் 100 நாள் பயனாளிகள் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் முறையிட்டனர்.


உடனடியாக அனைவருக்கும் 100 நாள் வேலை செய்வதற்கான அடையாள அட்டை போராட்டம் நடைபெற்ற இடத்திலேயே வழங்கப்பட்டது பின்பு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என்றால் வருகிற 23ஆம் தேதி இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர் நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


செய்தியாளர்; கே. பாலமுருகன்.

No comments:

Post a Comment

*/