தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
அவ்வறிப்பின்படி 2022ஆம் ஆண்டு சூன் 3-ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி பள்ளி / கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் 03.06.2022 அன்று பேச்சுப் போட்டிகள் நடத்தவேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப் பெற்றுள்ளதால் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பெற்ற பின்னர் பிறிதொருநாளில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறும். கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 03.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
அப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/-, என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க 2 மாணவர்களுக்கு மிகாமல் அனுப்பவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் பின்வரும் முகவரியில் நேரில் 1 அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 01.06.2022-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
கடலூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment