முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 May 2022

முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டம்.

 

முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டம்.


முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நெய்வேலி தொ.மு.ச. அரங்கத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதியன்று மாவட்ட, நகர, பேரூராட்சி, கிளை கழகம் சார்பில் அனைத்து இடங்களிலும் கொடி ஏற்றுதல்,இனிப்பு, அன்னதானம், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.


திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு குறித்து அப்பகுதி மக்கள் மிக வெகுவாக பாராட்டி வருவதால் அவரின் செயல்பாடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரை விரைவில் அமைச்சரவையில் இடம்பெற செய்வது


போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் உட்பட கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/