ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 May 2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது!!!!


கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்பிரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கனிமொழி தேவதாஸ்படை ஆண்டவர் முன்னிலை வகித்தார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் தணிகாசலம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய  வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார், கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர் .கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பேசினார். 


கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இடத்தில் கேட்டறிந்தார் மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கையை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் திமுக  கீரப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சபாநாயகம் புவனகிரி ஒன்றிய கழகச் செயலாளர் டாக்டர் மனோகர், மதியழகன், புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கந்தன் சேத்தியாதோப்பு நகர கழகசெயலாளர் அரசு கூடுதல் வழக்கறிஞர் மனோகரன் அரசு கூடுதல் வழக்கறிஞர் வேலு ராமலிங்கம் ஒன்றிய கவுன்சிலர்கள் கீர்த்திவாசன் ரஜினி, சாரதி இளைஞரணி அமைப்பாளர் நடராஜன்  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/