அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு மற்றும் பகல் நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் வேப்பூர், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இருப்பினும் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 75.00 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு
வேப்பூர் 75.00, காட்டுமயிலூர் 70.00, பண்ருட்டி 32.00 லக்கூர் 28.00, SRC குடிதாங்கி 25.00 மாத்தூர் 25.00, கடலூர் ஆட்சியர் அலுவலகம் 20.60, விருதாச்சலம் 20.00, வானமாதேவி 17.00, குப்பநத்தம் 15.20, குறிஞ்சிப்பாடி 12.00, கடலூர் இந்திய வானிலை ஆய்வு 11.20, தொழுதூர் 10.00, கீழ் செருவாய் 9.00, சேத்தியாத்தோப்பு 6.00, வடக்குத்து 6.00, கொத்தவச்சேரி 5.00, சிதம்பரம் 2.80, பெலாந்துறை 2.40, புவனகிரி 2.00, அண்ணாமலை நகர் 2.00, பரங்கிப்பேட்டை 1.20

No comments:
Post a Comment