சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூன் 7, 8ம் தேதி ஆய்வு: விரைகிறது அறநிலையத்துறை விசாரணைக்குழு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூன் 7, 8ம் தேதி ஆய்வு: விரைகிறது அறநிலையத்துறை விசாரணைக்குழு


சிதம்பரம் நடராஜர் கோயில் அறநிலையத்துறை விசாரணைக்குழு ஜூன் 7, 8ல் நேரடியாக ஆய்வு செய்கிறது. இக்குழுவிடம் 2014ம் ஆண்டு முதல் வரவு செலவு, சொத்து, திருப்பணி, வாடகை நிலுவை தொகை விவரங்களை தரும் வகையில் தயாராக வைத்திருக்க, விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி பொது தீட்சிதர்கள் சபை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கடலூர் நகை சரிபார்ப்பு துணை ஆணையர் (விசாரணை குழு ஒருங்கிணைப்பாளர்) ஜோதி சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், அறநிலையத்துறை சட்டம் 1959ல் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி ஒரு குழுவினை அமைத்தும், அதன் ஒருங்கிணைப்பாளராக என்னை நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த உத்தரவின்படி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலை குழு உறுப்பினர்கள் 7.6.2022 முதல் 8.6.2022 வரை நேரடியாக ஆய்வு செய்யப்படவுள்ளது. எனவே, ஆய்விற்காக கீழ்கண்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  •  2014 முதல் நாளது தேதிவரையிலான வரவு - செலவு கணக்குகள்
  •  2014 முதல் நாளது தேதிவரையிலான தணிக்கை அறிக்கைகள்.
  • 2014 முதல் நாளது தேதிவரையில் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றிற்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்கள்.
  • கோயிலுக்குச் சொந்தமான கட்டளைகள், கட்டளைகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் இனங்கள். 
  • சொத்துக்களின் தற்போதைய நிலை.
  • இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப்பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப்பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள்.
  •  கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை.
  •  கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைதாரர்கள் விவரம்.
  • கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள் ஆகிய விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த குழுவின் ஆய்வுக்கு முழுமையானஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*/