கடலூர் மாவட்டம், புவனகிரியில் வன்னியர் சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் காடுவெட்டி குருவின் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வன்னியர் சங்க துணைத்தலைவர் வத்திராயன்தெத்து செல்வராஜ், பாமக மாவட்ட நிர்வாகி செல்வ பிரதீஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகன் செட்டியார் ,ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், நகரச் செயலாளர் கோபிநாத், நகர தலைவர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் வன்னியர் சங்கம் பிரேம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில தலைவர் பு.த.அருள்மொழி கலந்துகொண்டு காடுவெட்டி குருவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குரு திரு உருவ படத்திற்கு முன்பு வன்னியர் சங்க நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் டாக்டர் அன்புமணி ராமதாஸை 2026 ம் ஆண்டு தமிழக முதல்வராக அரியணை ஏற்றுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாறன், சின்னமணி, கோதண்டராமன், இளையராஜா, சரண் ,சரண்ராஜ், வீரமணி, பிரபு ,தெய்வமணி, ரகுபதி, மகளிரணி அமுதா உள்ளிட்ட திரளான வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment