கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி மேற்கு இந்திராநகர் ஊராட்சியை சார்ந்த மாற்றுக்குடியிருப்பு இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன்-ஜெயா இவர்களின் அன்புமகள் தீபஸ்ரீ அவர்களின் 8-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அவர்களிடம் ஆசிபெறவேண்டும் என்று விரும்பிய தன்மகளை அலுவலகம் சம்மந்தமாக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தொழிலா நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நெய்வேலி வருகை புரிந்தார்.
இதனை அறிந்த அன்பழகன் அவர்கள் தன்மகளுடன் அவர் செல்லும் வழியிலே நின்று காெண்டிருக்க பிறந்த நாள் விழா காணும் குழந்தை அமைச்சர் அவர்களின் வருகைக்கு காத்திருப்பதை அறிந்த அமைச்சர் காரில் இருந்து இறங்கி அன்பழகன் ஜெயா இவர்களின் குழந்தையான தீபஸ்ரீ யை வாழ்த்தி சென்றார். அப்பாேது உடன் இருந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்களும் குழந்தையை வாழ்த்திச் சென்றார்.
எனக்கெல்லாம் அமைச்சர் வாழ்த்து சாெல்லுவாரா காரை நிறுத்துவாங்களா என நினைத்து காெண்டிருந்த குழந்தைக்கு இன்ப அதிர்ச்சி காெடுத்து சென்றார்கள்,இந்நிகழ்வன் பாேது கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்; தே. தனுஷ்.

No comments:
Post a Comment