கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகள், திரை அரங்குகள், பெட்டிக் கடைகள், குளிர்பான கடைகள் ஆகியவற்றில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் என ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பி.கே. கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்திரசேகரன், நல்லதம்பி, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆய்வின்போது பழக்கடையில் இருந்து கெட்டுப்போன 50 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. 5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. திரை அரங்குகளில் உள்ள கேண்டீன்களில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் காலாவதி உள்ளதா, தரமாக உள்ளதா என ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர்.3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் எச்சரித்தார்.

No comments:
Post a Comment