இடிந்து விழும் நிலையில் பேருந்து பயணியர் நிழற்குடை
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் வட்டம் பூர்த்தங்குடி கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைந்துள்ளது இங்கிருந்துதான் பல கிராமங்களிலிருந்து மக்கள் வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது மேலும் பேருந்து நிழற்குடை கடந்த 10 ஆண்டுகாலமாக சுவர்கள் இடிந்து போய் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால் இப்பொழுது கோடைக்கால வெயில் கொளுத்தி வருகிற நிலையில் இந்த அவல நிலை உள்ளதாகவும் மற்றும் மழை காலங்களில் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள் மேலும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் எப்போது வேணாலும் இடிந்து விழுமோ என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். இடிந்து விழும் முன் சரிசெய்து கொடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
செய்தியாளர் ; பிரகாஷ்

No comments:
Post a Comment