விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பத்தில் புகழ்பெற்ற புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்திலுள்ள புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலய திருத்தல அதிபர் தேவ சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான கிருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயம் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து ஏசு உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியும்
அதனைத் தொடர்ந்து, வானவேடிக்கையுடன் உயிர்த்தெழுந்த ஏசுவின் தேர் பவனி விழாவும் நடைபெற்றது.
தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உப்பு , மணிலா, முந்திரி ஏசுவின் மீது தூவினர்.
இந்த ஈஸ்டர் பண்டிகையில் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும், வெளி மாவட்டம் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிருத்துவர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.


No comments:
Post a Comment