விருத்தாசலம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 April 2022

விருத்தாசலம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

விருத்தாசலம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்றத் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு,கையில் பதாகை ஏந்தி,நமது பாரம்பரிய மஞ்சள் பையை அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு உபயோக படுத்துவோம்,துணி காகிதம் மற்றும் சணல் பைகளை பயன்படுத்துவோம், என கோஷமிட்டு விருத்தாசலத்தில் முக்கிய வீதியின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு செய்தனர்.


பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் உணவகத்தின் வரும் வாகனங்கள் பேருந்து நிலையத்திற்கு வர அனுமதிக்கக்கூடாது உள்ள தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்கள் இடம் போக்குவரத்துக்கு இடையூறாக வண்டியை நிறுத்த கூடாது என அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பொறுப்பு ஜெய்பிரகாஷ் நாராயணன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ராணிதண்டபாணி,நகர்மன்ற உறுப்பினர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன்,முத்துக்குமரன்,ஜெயலட்சுமி நம்பிராஜன்,சுந்தரி,தீபா முத்து,அன்பழகன்,ராசாத்தி,வசந்தி, அறிவழகி,மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்


No comments:

Post a Comment

*/