பெளத்த தம்ம சங்கம் சார்பில், நல்லூரில் டாக்டர் அம்பேத்கார் 132 வது பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

பெளத்த தம்ம சங்கம் சார்பில், நல்லூரில் டாக்டர் அம்பேத்கார் 132 வது பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழா

பெளத்த தம்ம சங்கம் சார்பில், நல்லூரில் டாக்டர் அம்பேத்கார் 132 வது பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழா 

கடலூர் மாவட்ட பெளத்த தம்ம சங்கத்தின் சார்பில் நல்லூர் ஏகேஆர் திருமண மண்டபத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 132- வது பிறந்தநாள் விழா மற்றும் கர்நாடகத்தில் பௌத்தம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு பௌத்த தம்ம சங்கத்தின் பொறுப்பாளர்கள் க. பஞ்சமுத்து, தலைமை தாங்கினார் ஆர். கதிர்வேல், திருமுருகன், காசிராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சமூக நல சேவகர் ஆசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார் எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த கர்நாடகத்தில் பௌத்தம் என்ற நூலை இந்திய குடியரசு கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளர் மங்காப்பிள்ளை வெளியிட நூலினை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் விடுதலை வளவன், கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரி பேராசிரியர் முனைவர் க. இரவிச்சந்திரன், நல்லூர் உடற்கல்வி ஆசிரியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


நிகழ்ச்சியில் சமூக சேவகர் நாரையூர் குணசேகரன்,கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னிவளவன், முத்துகருப்பன் வழக்கறிஞர்கள் ராஜீவ்காந்தி, சுமித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர்; ஜாபர்

No comments:

Post a Comment

*/