கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ,கொத்தட்டை ஊராட்சி அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரது குடிசை வீடு சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்த கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் கே.ஏ.பாண்டியன் அவர்கள் நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோ,வி.ராசாங்கம், ஒன்றிய குழு துணைத் தலைவர் மோகனசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரெங்கம்மாள், ரவி, ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி, கூட்டுறவு சங்க தலைவர் தன.கோவிந்தராஜன், துணைத் தலைவர் கோதண்டம், மற்றும் நிர்வாகிகள் சேகர், பெருமாள், மனோகர், உடன் இருந்தனர்.
செய்திகள்; K. அருள்ராஜ்
No comments:
Post a Comment