அப்போது அபிசுந்தரின் செல்போனில் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பேசியுள்ளார். அதில் அவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது விளை நிலத்தில் உள்ள கிணற்றின் அருகில் செல்போன் மட்டும் இருந்ததாகவும், அப்பகுதியில் யாருமில்லை எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும், அபிசுந்தர் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள், சரவணனின் விளை நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்து, வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர்.
நீ்ண்ட நேர தேடுதலுக்கு பிறகு அபிசுந்தரை பிணமாக மீட்டனர். அப்போது, அவரது உடலில் காயங்கள் இருந்தது. பின்னர் போலீசார், அபிசுந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது பெற்றோர், அபிசுந்தர் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளது என வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிசுந்தரை யாரேனும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றார்களா?, அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: த.ஐாயர்
No comments:
Post a Comment