கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் புதியதாக அமைய உள்ள வள்ளலார் சர்வதேச நிலையம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடையே கருத்து கேட்புக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் தலைமையில் மங்கையர்க்கரசி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்பிரமணியம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர்கள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் வடலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:
Post a Comment