"வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் "; மேயர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 March 2022

"வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் "; மேயர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்

கடலூர் மாநகராட்சியில் இன்று கடலூர் மாவட்ட மருத்துவ  மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் வரும் முன் காப்போம் திட்டத்தின்படி கடலூர் புதுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேயர் அவர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்துக்கொண்டார்.

இம்முகாமில் சித்த மருத்துவம், பல் மருத்துவம், பொது நல மருத்துவம், கொரோனா தடுப்பூசி என அனைத்து பிரிவு மருத்துவர்கள் வந்திருந்து பொதுமக்களை பரிசோதித்து மருத்துவம் செய்தனர்.    

       

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராமமூர்த்தி மாநகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment

*/