சிதம்பரம் வடலூர் மார்க்கத்திற்கு மருதூர் வழியாக கூடுதல் அரசு பஸ் இயக்க சமூக ஆர்வலர்கள் (மற்றும்) பொதுமக்கள் கோரிக்கை !!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடலூர் கோட்டம் சிதம்பரம் (மற்றும்) வடலூர் கிளை பணிமனைகளில் இருந்து கடந்த காலங்களில் சிதம்பரத்திலிருந்து மருதூர் வழியாக வடலூர் நெய்வேலி சேலம் மேட்டூர் சென்னை ஆகிய நகரங்களுக்கு இயக்கி வந்த அரசுப் பேருந்துகள் தடம் எண் 350 தடம் எண் 145 தடம் எண் 198 ஆகிய அரசு பேருந்து சேவைகளை போக்குவரத்து அதிகாரிகள் தற்போது வரை நிறுத்தி உள்ளனர் இந்த நிலையில் வடலூர் கிளை பணிமனையில் இருந்து அரசு நகரப் பேருந்து தடம் எண் 24 தினமும் சிதம்பரத்திலிருந்து புவனகிரி ஆலம்பாடி கிருஷ்ணாபுரம் ஜெயங்கொண்டாம் நத்தமேடு மருதூர் தலைக்குளம் பு.கொளக்குடி மருவாய் உள்ளடக்கிய கிராமங்களின் வழியாக வடலூருக்கு காலை 7:30 மணிக்கு இயக்கப்படுகிறது அதே போருந்து மீண்டும் வடலூரிலிருந்து சிதம்பரத்திற்க்கு காலை9:25 மணிக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில் கிராமங்களிலிருந்து வடலூர் மற்றும் புவனகிரி சிதம்பரம் வரையில் பள்ளி கல்லூரிகளுக்கு தினமும் சென்று படித்து வரும் மாணவர்கள் போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டில் பயணித்து வருகின்றனர் இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் பலமுறை போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் உள்ளன இந்நிலையில் நகர அரசுப் பேருந்துகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிருக்கான இலவச பாஸ் திட்டத்தில் கிராமங்களிலிருந்து வடலூர் மற்றும் புவனகிரி சிதம்பரம் ஆகிய நகரப் பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் மகளிர்கள் பயணித்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு இப் பேருந்தில் போதிய இடம் கிடைக்காமல் மாணவர்கள் படிக்கட்டுகளில்தொங்கியபடி பயணித்து வருகின்றனர் இதனால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளதுகூட்டம் அதிகம் இருப்பதால் அரசு நகரப் பேருந்தும் திணறுகிறது இதனால் பேருந்து ஓட்டுனர் களுக்கும் பஸ்சை ஓடுவதா? அல்லது மாணவ-மாணவிகளின் உயிரைக் காப்பாற்றுவதா? என்ற சவால் நிலையில் உள்ளனஇதனால் இந்த மார்க்கத்தில் பணிக்கு வர டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அச்சப்படுகின்றனர்.
தினந்தோறும் காலை மாலை நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சத்தில் உள்ளனர் மாணவ மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கடலூர் கோட்டம் சிதம்பரம் (மற்றும் ) வடலூர் பணிமனை அதிகாரிகள் இவ் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் கூடுதலாக இயக்கி விபத்து இல்லா மாவட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது
செய்தியாளர்: வீ.சக்திவேல்
No comments:
Post a Comment