அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை ஒப்பந்த நிபந்தனைப்படி மீண்டும் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 March 2022

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை ஒப்பந்த நிபந்தனைப்படி மீண்டும்

அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக இணைந்தபின் முதல் சங்க நிர்வாகிகள் கூடம் 12.03.22 அன்று ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடைபெற்றது 

இந்த ஆலோசனை கூட்டத்தில்;-

1) அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை ஒப்பந்த நிபந்தனைப்படி மீண்டும் அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிக்கு அழைக்க வேண்டும்

2) அவர்களை அண்ணாமலைக்கழக பணிக்கு அழைக்க நிதிசிக்கல் பிரச்சனையாக இருக்கும் பச்சத்தில் சுழர்ச்சி முறை பணிநிரவல் செய்து அவ் ஊழியர்களை அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிக்கு அழைக்க வேண்டும்

3) அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நிதிசிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்ற கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு  இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் முன் எடுப்பதும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் தோழர்: குமார்,மாநிலபொதுச்செயலாளர் தோழர் பொண்ணிவளவன் மாநிலப்பொருளாளர் தோழர் முத்துக்குமார் ஆகியோர்களும் மற்றும் அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்: தோழர் குமரவேல்,மாநிலப்பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்,மற்றும் மாநிலப் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

*/