இதில் தி.மு.க. தலைமையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த 2-வது வார்டு உறுப்பினர் ஏ. சிவாவும், அவரை எதிர்த்து 16-வது வார்டு உறுப்பினரும், தி.மு.க. நகரச் செயலாளருமான கே.ராஜேந்திரனும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.
தி.மு.க.வில் 2 பேர் மனு தாக்கல் செய்ததால் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் வாக்குப்பதிவ தொடங்கியது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் உட்பட 33 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. அதிகாரபூர்வமான வேட்பாளர் ஏ. சிவாவை நகர செயலாளர் ராஜேந்திரன் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஏ. சிவாவுக்கு 16 ஓட்டுக்களும், கே ராஜேந்திரனுக்கு 17 ஓட்டுகளும் கிடைத்தன. தேர்தல் அதிகாரியும் நகரசபை ஆணையாளருமான மகேஸ்வரி வெற்றி பெற்ற ராஜேந்திரனுக்கு சான்றிதழை வழங்கினார். பின்னர் ராஜேந்திரன் பண்ருட்டி நகரசபை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திமுக தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் சிவாவை எதிர்த்து நின்ற திமுக நகர கழக செயலாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றதால் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர் சிவா அவருடைய ஆதரவாளர்களுடன் பண்ருட்டி நகராட்சிஅலுவலகம் முன்பு போராட்டத்தில்ஈடுபட்டனர்
இதனைத் தொடர்ந்து இன்று போஸ்டர்கள் ஒட்டி பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் கே.ராஜேந்திரன் அவர்களை பதிவி விலக வேண்டும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ள A. சிவா அவர்களுக்கு பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பதவி தரவேண்டும் என்று 2-வது வார்டு T.பாபு முன்னாள் இளைஞர்அணி செயலாளர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பண்ருட்டியில் திமுக நகரமன்ற தலைவர் ராஜேந்திரனை பதவி விலக வேண்டும் என்றுதிமுக தொண்டர்களே போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment