பின்னர் மனு அளிப்பது போல் உள்ளே சென்றபோது போலீசார் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது பூச்சிமருந்து பாட்டிலை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் தாங்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் விவசாய நிலத்திற்கு வரும் குடிநீர் குழாயை 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி விட்டார். இதுசம்பந்தமாக மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் மீண்டும் குழாய் அமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது .
No comments:
Post a Comment