சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது!!!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 March 2022

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது!!!!!!


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்லி அறக்கட்டளை சார்பில் தெற்கு வீதியில் 41- வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மஹா சிவராத்திரி நாளான நேற்று (01/03/2022) மாலை தொடங்கியது. மாலை 06.15- 06.30 மணி வரை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 06.30- 06.55 மணி வரை மைசூர் அனுஷாராஜின் பரதநாட்டியம், இரவு 07.00- 07.30 மணி வரை தொடக்க விழா நிகழ்வுகள், இரவு 07.30- 08.05 வரை அருட்பெரும்ஜோதி பரதநாட்டியம், இரவு 08.10- 08.40 மணி வரை ஹைதராபாத் ஹிமன்சே கத்ரகட்டாவின் கூச்சுப்பிடியும், இரவு 08.45- 09.10 மணிக்கு இத்தாலி லுக்ரேசியா மனிஸ்காட்டின் பரதநாட்டியம், 09.15- 09.50 மணி வரை புதுவை ஸ்ரீஉதயம் நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டியம், 09.55-10.25 மணி வரை பெங்களூரு சிருஷ்டிகலா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், 10.30- 11.05 மணி வரை பெங்களூரு நிருத்யா கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.


இந்த நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 5- ஆம் தேதி வரை நடக்கிறது. மார்ச் 4- ஆம் தேதி அன்று இரவு 07.45- 08.45 மணி வரை நிருத்திய சங்கமம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஒரே மேடையில் பரதம், மோகினி ஆட்டம், கூச்சுப்பிடி, கதக், ஒடிசி ஆகியவை நடக்கிறது. நாட்டியாஞ்சலி விழாவிற்கான ஏற்படுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக, அறக்கட்டளைத் தலைவா் ஆா்.முத்துக்குமரன் வரவேற்றுப் பேசினாா். செயலா் ஏ.சம்பந்தம் சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தினாா். துணைத் தலைவா்கள் சக்தி ஆா்.நடராஜன், எஸ்.ஆா்.ராமநாதன், செயலா் ஏ.சம்பந்தம், பொருளாளா் பா.பழநி, உறுப்பினா்கள் ஆா்.கே.கணபதி பிள்ளை, எஸ்.அருள்மொழிச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த விழாவை சென்னை பரத கலாஞ்சலி நிறுவனா்கள் பத்மபூஷன் வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் ஆகியோா் தொடக்கிவைத்தனா்

No comments:

Post a Comment

*/