| பதவியேற்பு |
பேரூராட்சிகளில் அண்ணாமலைநகர், கெங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை,
மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை தலா 15 வார்டுகளுக்கும் காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி தலா 18 வார்டுகள் என மொத்தம் 222 வார்டுகள் என மாவட்டம் முழுவதும் 447 வார்டுகளுக்கு தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. இதில் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
வாக்குகள் கடந்த 24-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
இதையடுத்து வெற்றி பெற்ற 447 வார்டு கவுன்சிலர்களும்(02/03/2022 )இன்று புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் பதவி அவர்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தனித்தனியாக பதவி பிரமாண உறுதி மொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்டனர்
No comments:
Post a Comment