கடலூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள குளத்தில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இஆப., அவர்கள் மீன் குஞ்சுகள்இருப்பு செய்தார்.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மீன் வளத்துறையின் மூலம்ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து குளங்கில் மீன் உற்பத்தியை பெருக்கிடும் பொருட்டுகடலூர் மாவட்டத்திற்கு 25 ஹெக்டர் பரப்பளவில் ரூ.2.43 இலட்சம் மதிப்பில்செயல்படுத்தப்பட்டது. 50 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.5 இலட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு 55 பஞ்சாயத்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டதில் இன்று(25.02.2022) கடலூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில் உள்ளகுளத்தில் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான இந்திய பெருங்கண்டை ரக மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இருப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.ரஞ்ஜீத் சிங்,இ.ஆ.பஅவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் திரு.பவன்குமார்ஜி.கிரியப்பனவர், இஆப.,அவர்கள், துணை இயக்குநர் (மீன்வளத்துறை)திரு.வேல்முருகன், உதவி இயக்குநர்(மீன்வளத்துறை) திரு.குமரவேல் மற்றும்அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment