கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆவட்டி கூட்ரோடு பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கடைகள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்படும் , பிளாஸ்டிக் பைகள், ஹோட்டல்களில் இருந்து பயன்படாத கழிவுகளை எல்லாம் குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே கொட்டிவிட்டுச் செல்கின்றன இதனால் இந்தப் பகுதியில் உள்ள சாலைகளை கடக்கும் பொழுது துர்நாற்றம் அடிக்கிறது என்று வழியாக செல்லும் சாலைகளில் எல்லாம் முகம் சுழித்துக் கொண்டு செல்வதாகவும் ,
இதனைத் தொடர்ந்து இன்று அந்த குப்பைகளை எரிக்கப்பட்டுதால், சுற்றுவட்டார பகுதியில், புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த பகுதி மக்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
No comments:
Post a Comment