கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் கிராமத்தில் மயூரா, கோமுகி,மணிமுத்தா நதிகள் இணையும் இடத்தில் பிரசித்தி பெற்ற வில்வவனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது காசியை விட அதிக புண்ணிய நதியான இங்கு பிரிந்த "பஞ்சபாண்டவர்கள் ஐவரும் ஒன்று கூடிய இடம் என்றும்", இங்குள்ள மணிமுத்தாற்றில் குளித்து மாசிமகத்தன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து ,வில்வவனேஸ்வரர் சமேத பாலம்பாள், பிரஹந்தநாயகியை வணங்கினால் பூர்வ ஜென்மம் மற்றும் மூதாதையரின் பாவங்கள் நீங்கி துன்பங்கள் விலகும் என்று கூறுகிறார்கள்நேற்று பிப்ரவரி 17 ந் தேதி மாசி மகம் என்பதால் இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு திதி கொடுக்க சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர் அதனால் அதிகாலை முதலய போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர்கள் சந்திரா, ரவிசந்திரன் ஆகியோர் தலைமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் தீயணைப்பு துறை அலுவலர்கள் சண்முகம் தலைமையில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தனர்
செய்தியாளர்: k.ஜபார்
No comments:
Post a Comment