இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் குப்புசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment