கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையத்தில் கிடந்த மர்ம மூட்டையைக் கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.திட்டக்குடி பஸ்நிலையத்தில் சிறிய சாக்கு மூட்டை கிடக்கிறது என திட்டக்குடி போலீசாருக்கு நேற்றிரவு 7 மணியளவில் தகவல் கிடைத்தது. திட்டக்குடி போலீசார், அந்த மூட்டையைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. இதை பஸ் நிலையத்தில் வீசிச் சென்றது யார் என அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி., காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர். பஸ் நிலையத்தில் கிடந்த மூட்டையால் திட்டக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது
No comments:
Post a Comment