குறிஞ்சிப்பாடி அருகே வெல்டர் தற்கொலை – குடும்ப தகராறு காரணம் என தகவல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 December 2025

குறிஞ்சிப்பாடி அருகே வெல்டர் தற்கொலை – குடும்ப தகராறு காரணம் என தகவல்.


குறிஞ்சிப்பாடி, டிச. 01 :

குறிஞ்சிப்பாடி அருகே ஐய்யந்தூர் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் (30) என்ற வெல்டிங் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருபாகரன், ஏழு ஆண்டுகள் முன்பு அதே ஊரைச் சேர்ந்த மோனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். சமீப நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருமணப் பிரச்சினைகளின் காரணமாக மோனிஷா தனது தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.


இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான கிருபாகரன் நேற்று வீட்டிலேயே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிருபாகரனின் தாய் மல்லிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஐய்யந்தூர்–குறிஞ்சிப்பாடி பகுதிகளில் துயரத்தைக் கிளப்பியுள்ளது.


உங்கள் சுற்றத்தாரில் யாரேனும் மனஉளைச்சல், மனஅழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் போன்ற பிரச்சினைகளில் சிக்கியிருந்தால், உடனடியாக உதவி பெறுங்கள்:

தமிழ்நாடு மனநலம் உதவி எண்: 104


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

No comments:

Post a Comment

*/