மின்னல் தாக்கி இறந்த விவசாயி மற்றும் விவசாயக்கூலிகளுக்கு ரூ.30 இலட்சம் நஷ்டஈடு வழங்குக பாஜக வலியுறுத்தல்
கடலூர் மாவட்டம் வேப்பூரில் வயலில் களை எடுக்கும்போது நான்கு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்கள்.ஒரு பெண்மணிக்கு கண்பார்வை மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு உணவளிக்கும் தொழில் செய்யும் விவசாயிகள் இடி,மின்னலை பொருட்படுத்தாமல் தனது பணியை செய்துள்ளார்கள்.இறந்தவர்கள் குடும்பத்திற்கு பாஜக விவசாய அணி தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு குடும்பங்களுக்கு நட்டேடு வழங்க கோரி வலியுறுத்தல்
அரசு விதிப்படி பெயரளவில் வழங்கப்படும் ஒரு இலட்சம் அல்லது இரு இலட்சம் இழப்பீடாக வழங்குவது குடும்ப வாரிசுகளுக்கு போதுமானதாக அமையாது. ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தோருக்கு ரூ.10 இலட்சம் வழங்கியது திமுக அரசு.கரூரில் நடிகரைக் காண வந்து உயிரிழந்தோருக்கு ரூ.10 இலட்சம் வழங்கியது.அந்த வகையில் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்து பெண்மணிகள் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிவாரணமும்,கண் பார்வை இழந்த பெண்மணிக்கு ரூ.15 இலட்சம் இழப்பீடும், அரசுப்பணியும் வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் வலியுறுத்தினார்
தமிழக குரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்

No comments:
Post a Comment