சர்வதேச கராத்தே கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பும் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்புவரவேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 October 2024

சர்வதேச கராத்தே கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பும் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்புவரவேற்பு.


சர்வதேச அளவில் நடந்த கராத்தே தற்காப்பு கலையின் ஒரு பிரிவான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டுக்குச் சென்று அப்போட்டியில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய வீராங்கனைக்குசென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உஸ்பெஸ்கிஸ்தான்  தாஷ்கண்டில்  கடந்த செப்டம்பர் 24 முதல் 29ந்தேதி வரை உலகக்கோப்பைஉஸ்பெஸ்கிஸ்தான் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் வாக்கோ  இந்தியா சார்பில்  தமிழக வீரர்கள்   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கமிட்டி மூலம்  தேர்வான 11 வீரர்கள் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில்  கடலூர் மாவட்ட மாணவி  எஸ். சுபாஷினி. 55 கிலோ எடை பிரிவில். லைட் கான்டெக்ட். மற்றும்  கிக் லைட். பிரிவில் வெற்றி பெற்று  இரண்டு தங்கப்பதக்கம் வென்று   நமது நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். 


வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளை  தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்சிங் சங்கம்  கடலூர் மாவட்ட வீரு கிபாக்ஸிங்  சங்கம் சார்பில்  சென்னை விமான நிலையத்தில்  மாநிலத் தலைவர்.திரு சுரேஷ் பாபு, துணைத் தலைவர் சதீஷ், தமிழ்நாடு  கோச். சந்துரு,  கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்சிங்  சங்கத்தலைவர்  சென்சாய்.வி.ரங்கநாதன், செயலாளர் பி.சத்யராஜ். பொருளாளர் பிருத்தியூனன், ராஜ்கிரன் ஆகியோர் தலைமையில் மாணவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இப்போட்டியில்  பங்கேற்பதற்கு ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 2 லட்சம் வீதம்  11 வீரர்களுக்கு  தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை சார்பில்  22 லட்சம் வழங்கப்பட்டது. சர்வதேச போட்டியில் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு உதவியாக இருந்த தமிழக அரசுக்கு கடலூர் மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்திருக்கிறார்கள். 

No comments:

Post a Comment

*/