கடந்த 40 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு உட்பட அனைத்து பொருட்களின் விலை உயர்வு, போதைப்பொருள் பழக்கவழக்கங்கள் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவால், நாள்தோறும் மக்களை வாட்டி வதைக்கும் ஸ்டாலின் அரசை கண்டித்து, கடலூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், வடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு, கடலூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சொரத்தூர். ராஜேந்திரன் தலைமையில், கண்டன முழக்கங்கள் எழுப்பி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் வடலூர் நகரக் கழக செயலாளர் சி.எஸ் பாபு மற்றும் ஒன்றிய கழக செயலாளர் வினோத் வரவேற்பு உரை ஆற்றினர். இப் போராட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜசேகர், ஒன்றிய கழக செயலாளர் கமலக்கண்ணன், நெய்வேலி நகரக் கழக செயலாளர் கோவிந்தராஜ், நகரத் தலைவர் வேல்முருகன் உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், நெய்வேலி நகர நிர்வாகிகள், பண்ருட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கையில் பதாகையை ஏன்றியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்
No comments:
Post a Comment